அரிசியின் விலை குறைப்பு.

இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலையினை 5 ரூபாவினால் இன்று முதல் குறைக்குமாறு சதொச மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

அரிசி சந்தைப்படுத்தல் சபையினால் விநியோகிக்கப்படும் அனைத்து அரிசி வகைகளின் விலைகளும் இவ்வாறு குறைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

1kg சம்பா 225 ரூபா, கீரி சம்பா 245 ரூபா,வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி 205 ரூபா,வெள்ளை மற்றும் சிவப்பு நாடு 215 ரூபாவுக்கும் இன்று முதல் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version