பாதுகாப்புக்கே பாதுகாப்பு இல்லையா?

மாவனல்ல பொலிஸ் நிலையத்துக்குள் சென்ற இருவர், கடமையிலிருந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரை பாலியல் ரீதியாக தாக்கியதாகவும், அவதூராக பேசியதோடு தங்களுக்குள் அவர் தொடர்பில் அசிங்கமான பாலியல் ரீதியான கருத்துக்களை பகிர்ந்ததாகவும் பத்திக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் 27 வயதான இராணுவ சிப்பாய் என தெரியவந்துள்ளது. விசாரணைகளின் பின்னர் அவரை மாவானல்ல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இரண்டாம் நபரிடம் வாக்குமூலம் எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version