துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன.
அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
அதேவேளை துருக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உட்பட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.