துருக்கியில் நிலநடுக்கம்!

துருக்கியின் அஃப்சின் பகுதியில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது அஃப்சின் பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதெனவும் மற்றும் அந்நாட்டின் பல நகரங்கள் அதிர்வை உணர்ந்துள்ளதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிலர் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், உயிர் அல்லது உடைமை சேதம் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version