கோதுமை மாவின் விலையினை 10 ரூபாவினால் அதிகரிப்பதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இன்று முதல் இந்த விலையேற்றம் நடைமுறைக்கு வரும் என குறித்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இருப்பினும் குறித்த நிறுவனங்களின் முகவர்கள் ஏற்கனவே விலையினை கூட்டியே மாவினை விற்பனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீமெந்து, சமையல் எரிவாயு, பால் மா வரிசையில் தற்போது கோதுமை மாவும் விலையேற்றப்பட்டுள்ளது. இந்த விலையேற்றங்கள் காரணமாக இன்னமும் பல பொருட்களும், தயாரிப்புகளும் விலையேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
பேக்கரி தயாரிப்புகள் மற்றும் தேநீர் விலைகள் அதிகரிப்படுமெனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.