இலங்கையின் தற்போதைய பிரபல இசைக்கலைஞரான யொஹானி டி சில்வா இந்தியாவில் இசை நிகழ்ச்சிகளில் கலந்துவிட்டு, நாடு திரும்பியுள்ளார். டெல்லி, மும்பை, ஹைட்ராபாட் ஆகிய இடங்களில் இசை நிகழ்ச்சிகளில் கலந்துவிட்டு நாடு திரும்பியுள்ளார்.
இலங்கை என்ற நாடு இருப்பது இந்தியா மக்களுக்கு தெரிந்து இருந்தது. ஆனால சிங்கள மொழி பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்த பாடல் மூலமாக அதனை அறிந்துள்ளனர் என நாடு திரும்பிய யொஹானி தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு 11.25 இற்கு மும்பாயிலிருந்து வருகை தந்த விமானத்தில் யொஹானி இலங்கையை வந்தைடைந்தார். தன்னுடைய பாடல்களுக்கு மிக சிறப்பான ஆதரவு கிடைத்ததாகவும், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.