ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணிகளுக்கிடையில் லங்காக பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றையா நாளின் இரண்டாம் போட்டியும், கண்டி, பல்லேகல மைதானத்தின் இறுதிப் போட்டியும் ஆரம்பித்துள்ளது.
யாழ் அணி இன்று வெற்றி பெற்றாலே அடுத்த சுற்று வாய்ப்பு இலகுவாகும் என்ற நிலை காணப்படுகிறது. அதே போன்று கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணிக்கும் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
அணி விபரம்
யாழ் அணி
1 திஸர பெரேரா, 2 நிஷான் மதுஷ்க 3 ரஹ்மனுள்ள குர்பாஸ், 4 டுனித் வெல்லாளகே, 5 மஹீஸ் தீக்ஷண, 6 சொஹைப் மலிக் 7 நுவான் துஷார 8 சரித் அஸலங்க 9 டேவிட் மில்லர் 10 டில்ஷான் மதுசங்க 11 தௌஹித் ரிதோய்
கொழும்பு அணி –
1 லஹிரு உதார 2 பாபர் அஸாம், 3 பத்தும் நிஸ்ஸங்க, 4 நுவனிது பெர்னாண்டோ, 5 மொஹமட் நவாஸ், 6 இப்திகார் அஹமட் 7 சாமிக்க கருணாரட்ன, 8 ரமேஷ் மென்டிஸ், 9 லக்ஷான் சண்டகன், 10 நசீம் ஷா, 11 மதீஷ பத்திரன