ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்வதா? இல்லையா? ஏன்பது தொடர்பான இறுதி தீர்மானம் திங்கட்கிழமை (15/11) அன்று அறிவிக்கப்படுமென ஆசிரிய – அதிபர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை சம்பளப் பிரச்சினையை தவிர்த்த ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வுக்கோரி நாளைய தினம் (12/11) கொழும்பு – விகாரமஹாதேவி பூங்கா சுற்றுவட்டத்தில் பேரணியில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் – அதிபர் முன்னணி சேவை காரியலயத்தில் இன்று (11/11) இடம்பெற்ற ஊடகவியலாளரர் சந்திப்பின் போதே சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.