ஐக்கிய தேசிய கட்சியினர் இன்று (12/11) அரசாங்கத்தின் விலைவாசி கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவு திட்டம் இன்றைய தினம் பாராளுமன்றில் முன்வைக்கப்படும் நிலையில் ஐக்கிய தேசிய கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளமை குறித்து அறியமுடிகிறது.
இதேவேளை நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் மினுவங்ககொடை பகுதியில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.