நாட்டில் இன்றைய தினம் பல பகுதிகளிலும் சீரற்ற வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அதன்படி மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் கடல்சார் தொழில்களில் ஈடுபடும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, கண்டி மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் குறித்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு மையம் அறிவித்துள்ளது.