60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசியினை பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளை (17/11) முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதன்படி மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அநுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் நாளை இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூஸ்டர் தடுப்பூசிகளானது, இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த பின்னர் அவற்றை பெற்றுக்கொள்ள முடியமென சன்ன ஜயசுமன மேலும் குறிப்பிட்டுள்ளார்.