‘ஆமி அமில’ கைது

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்குழுவின் உறுப்பினரான ஆமி அமில இன்று (19/11) காலை விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தங்காலை பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 3,780 மில்லிகிராம் அளவிலான ஹெரோய்ன் போதைப்பொருளினையும் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆமி அமில பல்வேறு குற்றச்சாட்டுக்களுடனும் கொலைச் சம்பவங்களுடனும் தொடர்புடைய நிலையில், 2004 இல் இடம்பெற்ற ‘வீரகெட்டிய சுனில் மரணம்’ மற்றும் ‘வீரகெட்டிய தர்மா’ மரணம் ஆகியவற்றுடனும் 2005 இல் இடம்பெற்ற ‘ரதம்பல கஜநாயக்க’ சம்பவம் மற்றும் 2015 இல் இடம்பெற்ற ‘பள்ளிக்குடா உக்கா’ கொலை சம்பவங்களிலும் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

'ஆமி அமில' கைது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version