12 பேர் கைது

ஃபேஸ்புக் ஊடாக வெலிகம பிரதேசத்தில் நேற்று (21/11) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரம் ஒன்றினை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

இதில் ஹெரோயின், கொக்கேன், கேரள கஞ்சா உட்பட பல வகையான போதைப்பொருட்களை உடன் வைத்திருநத 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகம – மிதிகம பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் குறித்த விருந்துபசாரம் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து நேற்று இரவு பொலிஸாரால் குறித்த விடுதி சுற்றிவளைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு போதைப் பொருட்களை உடன் வைத்திருந்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 பேர் கைது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version