2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு சற்று முன்னர் பாராளுமன்றத்தில் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஏழு நாள் விவாதத்திற்குப் பிறகு.வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 153 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதனிடையே, திட்டத்திற்கான குழு விவாதம் நாளை (23/11) முதல் நடைபெறவுள்ளது.
அதற்கமைய ஒவ்வொரு அமைச்சுக்களின் அமைச்சுகள் தொடர்பான செலவினத் தலையீடுகள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு இறுதியில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் திருத்தங்களைக் கொண்டு வர வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.