பதாகைகளுடன் நுழைந்த எம்.பிக்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ‘பெண்களுக்கெதிரான வன்முறையை நிறுத்து’ என்ற பதாகைகள், சுவரொட்டிகளை ஏந்திக்கொண்டு இன்று (25/11) சபையில் கலந்துகொண்டனர்.

இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாகும் என்பதனால் கைகளில் செம்மஞ்சள் நிற பட்டிகளை அணிந்த வண்ணம் இவர்கள் சபைக்குள் நுழைந்தனர்.

அத்துடன் கடந்த சனிக்கிழமை (22/11) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி, பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தமைக்கு எதிராகவும் இன்று இந்த எதிர்ப்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version