பாடகர் சுனில் பெரேரா மறைவு

இலங்கையின் பிரபல பாடகர் சுனில் பெரேரா கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். கொரோனா காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். 1952 ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்த இவர் சிங்கள, ஆங்கில, தமிழ், ஹிந்தி பாடல்களை மேடைகளில் பாடியவர். இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பல்துறை விற்பன்னராக திகழ்ந்த இவர் ஜிப்ஸீஸ் இசைக்குழுவை நீண்டகாலமாக நடாத்தி வந்தவர். இவரது பாடல்கள் இலங்கையின் சகல மக்கள் மத்தியிலும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்த நாளுக்கு 8 தினங்கள் உள்ள நிலையில் தனது 69 ஆவது வயதில் இறந்துள்ளார்.

பாடகர் சுனில் பெரேரா மறைவு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version