முல்லை ஊடகவியலாளர் மீது தாக்குதல்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று (27/11) இடம்பெற்ற படையினரின் தாக்குதல் சம்பவத்தில் முல்லைத்தீவு ஊடகவியலாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடக அமையத்தின் பொருளாளரும், பிராந்திய ஊடகவியலாளருமான வி.விஷ்வ சந்திரன் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை புகைப்படம் எடுக்கும் பொழுதே அங்கு விரைந்த இராணுவத்தினர் நால்வர் இவரை தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த ஊடகவியவிலாளரை உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.

முல்லை ஊடகவியலாளர் மீது தாக்குதல்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version