சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பு மற்றும் வாகன நெரிசல் அதிகம் ஏற்படும் பகுதிகளில் பாதசாரிகள் நடைபாதைகளில் வாகனம் தரிக்கும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

பாதசாரிகள் நடைபாதையில் வாகனங்களை தரிப்பதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக பாதசாரிகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதற்கமைய பாதசாரிகள் நடைபாதையில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்ற இன்று (08/12) முதல் விசேட வேலைத்திட்டம் முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அது இடை நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version