ஆசிரியரின் அடாவடிச் செயல் – வெயாங்கொடையில் சம்பவம்

வெயாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் உயர்தர மாணவர் ஒருவரை, பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் குழாயால் தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன், பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் வத்துபிட்டிவல மாவட்ட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில், தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கு பொறுப்பான ஆசிரியர் தன்னை மண்டியிடுமாறு உத்தரவிட்டதாகவும், குழாயால் அடித்ததாகவும் சிறுவன் பொலிஸாரிடம் கூறினார். அத்துடன் வகுப்பு ஆசிரியர் தலையிட்டு மாணவனை காப்பாற்ற முயற்சித்த போதும் பயனளிக்கவில்லை என்பது தெரியவந்தது.

சந்தேகத்திற்குரிய ஆசிரியர் ஹம்பிட்டியாவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், சம்பவத்தை தொடர்ந்து அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்த நிலையில், மேலதிக விசாரணைகளை வெயாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆசிரியரின் அடாவடிச் செயல் - வெயாங்கொடையில் சம்பவம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version