நாட்டின் ஏற்றுமதி செயல்திறனில் பாரிய வளர்ச்சி!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் அமெரிக்க டொலர் 1,552 மில்லியன் என பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 13.7 சதவீத வளர்ச்சி என அதன் தலைவர் மங்கள விஜேசிங்க கூறினார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
2026 ஜனவரியில் மொத்த ஏற்றுமதி வருமானம் அமெரிக்க டொலர் 1,552 மில்லியனாக பதிவாகியுள்ளதாகவும், அதில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் அமெரிக்க டொலர் 1,165 மில்லியன் ஆக இருந்து, கடந்த ஆண்டை விட 10.5% வளர்ச்சி காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, சேவைத் துறை ஏற்றுமதி வருமானம் அமெரிக்க டொலர் 367 மில்லியன் ஆக உயர்ந்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24.5% வளர்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

2025 ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 2026 ஜனவரியில் நாட்டின் ஏற்றுமதி செயல்திறன் 13.7% உயர்வடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த காலப்பகுதியில் சிறப்பாக செயல்பட்ட ஏற்றுமதி துறைகளாக தேயிலை, தேங்காய், ரப்பர், உணவு மற்றும் பானப் பொருட்கள், மின்சாதனங்கள், மின்னணு பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கடல் உணவுப் பொருட்கள் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
சேவைத் துறையில், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப (IT) துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version