கெரவலப்பிட்டி பகுதியில் தீ பரவல்!

கெரவலப்பிட்டி அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகிலுள்ள குப்பை மேட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (26.02) காலை தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீ ஏற்கனவே பரவி வருவதாகவும், தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version