‘ஆரோக்ய’ திட்டத்திலிருந்து விலகுவதாக GMOA அறிவிப்பு!

சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய “ஆரோக்ய” திட்டத்திலிருந்து இன்று (02,02) முதல் விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தங்களது கோரிக்கைகளுக்கு அரசு திருப்திகரமான பதில் அளிக்காததன் காரணமாகவே இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக GMOA ஊடக பேச்சாளர் வைத்தியர் சமல் விஜேசிங்கே தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ஆரோக்ய’ திட்டத்தின் நோக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து சந்தேகம் உள்ளதாகவும், இது தொடர்பாக முறையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார துறையில் பல அவசர பிரச்சினைகள் நிலவியுள்ள நிலையில், தேவையற்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், இந்த முயற்சிக்கு அரசியல் நோக்கங்கள் உள்ளதாகவும் GMOA குற்றம் சாட்டியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version