ஹபரணை – பொலன்னறுவை வீதியில் விபத்து – பலர் காயம்!

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, மற்றொரு பேருந்து மற்றும் நெல் அறுவடை இயந்திரத்தை எடுத்துச் சென்ற உழவு இயந்திரத்துடன் மோதியதே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது பேருந்துகளில் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் ஹபரணை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை ஆபத்தானதாக இருந்ததால், அவர் மேல்சிகிச்சைக்காக தம்புள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version