இலங்கை மின்சார சபை கலைப்பு!

இலங்கையின் மின்சக்தித் துறையில் 56 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இலங்கை மின்சார சபை (CEB) நேற்று (08,02)நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஆறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

2024-ஆம் ஆண்டின் 36-ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, மின் உற்பத்தி, விநியோகம், கடத்துகை மற்றும் கட்டமைப்பு இயக்கம் ஆகியவை தனித்தனி நிறுவனங்களாக செயல்படவுள்ளன.

விருப்ப ஓய்வு திட்டத்தை தெரிவு செய்யாத ஊழியர்கள் புதிய நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை முதல் வழங்கப்படவுள்ளதாக முன்னாள் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.

இந்த மறுசீரமைப்பால் மின் உற்பத்தி அல்லது விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version