தேசிய கொடி விவகாரம் – சிக்கினார் ஹார்டிக்!

இந்தியா கிரிக்கெட் வீரர் ஹார்டிக் பாண்டியா மீது தேசியக் கொடியை அவமதித்ததாக குற்றச்சாட்டு முன்வைத்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பின்னரான கொண்டாட்டங்களின்போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புனே நகரத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் இந்த புகாரை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போட்டி முடிந்தபின் நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது, மேடையில் படுத்தபடி இந்திய தேசியக் கொடியை தனது முதுகில் கட்டிய நிலையில் ஹர்டிக் பாண்டியா காணப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம் என இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version