மணல் டிராக்டர் மோதி பொலிஸ் அதிகாரி பலி!

யாழ்ப்பாண பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிராக்டர் மோதியதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் பகுதியில் உள்ள சோதனை தடுப்பு பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த அதிகாரியின் உடல் சாவகச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், தப்பிச் சென்ற டிராக்டர் ஓட்டுனரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் தேடுதல் நடத்தி வருகின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version