பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர் கைது!

மொரகஹஹேன பகுதியில் ஒரு பெண்ணை கடுமையாக தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெடி (firecrackers) வெடிப்பதால் தனது நாய்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது எனக் கூறி அண்டை வீட்டாரிடம் அதை நிறுத்துமாறு அந்த பெண் கேட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் ஏற்பட்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, மொரகஹஹேன பொலிஸார் விசாரணையை ஆரம்பித்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்தனர்.

அவர் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஏப்ரல் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version