தொடர்ந்தும் அதிகரிக்கும் டெங்கு தொற்று!

இந்த ஆண்டில் இதுவரை 29,589 டெங்கு நோயாளர்கள் மற்றும் 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதிக ஆபத்துள்ள 39 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மேல் மாகாணத்திலேயே அதிக நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகமாக காணப்படுவதாகவும், பாடசாலைகள், அரச அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களிலும் பரவல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version