எதிர்வரும் ஆண்டு நாவலர் ஆண்டாக பிரகடனம்

2022ஆம் ஆண்டு நாவலர் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று (17/12) நடைபெற்றது.

சைவத்திற்கும், தமிழ் உலகிற்கும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் இருநூறாவது ஜனன தினத்தை முன்னிட்டு, 2022 ஆம் ஆண்டு ‘நாவலர் ஆண்டு’ என பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அங்கீகாரக் கடிதத்தை இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரனிடம் பிரதமர் இன்று கையளித்துள்ளார்.

எதிர்வரும் ஆண்டு நாவலர் ஆண்டாக பிரகடனம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version