புதிதாக ரூ.10,000 நாணயத்தாள்?

புதிதாக 10,000 ரூபா நாணயத்தாளை அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை என நிதி அமைச்சு உறுதியளித்துள்ளது.இது தொடர்பில் பரவும் வதந்திகளில் உண்மையில்லை என அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதாக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனை தொடர்ந்து, அந்நிய செலாவணி கையிருப்பின் அளவை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்குத் தேவையான திட்டங்களை மத்திய வங்கி ஆளுநர் மேற்கொண்டுள்ளதாகவும் எஸ்.ஆர். ஆட்டிகல மேலும் தெரிவித்துள்ளார்.

புதிதாக ரூ.10,000 நாணயத்தாள்?
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version