அமோக வசூலில் தலைவி திரைப்படம்

இரும்புப் பெண் என்றழைக்கப்படும் தமிழகத்தின் முன்னால் முதலைமைச்சரான மறைந்த ஜெயலலிதா ஒரு பெண்ணாக நடிப்பிலும் அரசியலிலும் சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெற்றவர்.


இவரது வரலாறு தலைவி எனும் பெயரில் இயக்குநர் விஜயின் இயக்கத்தில் ஜெயலலிதாவாக கங்கனாரணவத் மற்றும் எம்ஜிஆராக அரவிந்தசாமியின் நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது.

அமோக வசூலில் தலைவி திரைப்படம்

இம்மாதம் நான்காம் திகதி நடிகை கங்கனாரணவுத்தின் விருப்பின் பெயரில் கங்கனாரணவுத் மற்றும் இயக்குநர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று ஆசிர்வாதம் பெற்றிருந்தனர்.

கொவிட் காரணமாக திரைப்பட வெளியீடு பிற்போடப்பட்ட நிலையில் 50 வீத ஆசன ஒதுக்கீட்டுடன் நேற்றைய தினம் தியேட்டரில் இத் திரைப்படம் வெளியாகியிருந்தத நிலையில் முதல் நாளே 1.2 கோடிக்கு வசூலாகியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் தரவுகள் தெரிவிக்கின்றன.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version