எதிர்வரும் 5ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று (29/12) அறிவித்துள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 17 ரூபா எனவும் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 14 ரூபாவிலிருந்து 3 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.