இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை திடீர் அதிகரிப்பு காரணமாக பால் தேநீரை விற்பனை செய்வதைத் தவிர்ப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக பால்மாவின் விலை அதிகரிப்பு மற்றும் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பால் தேநீர் அல்லது சாதாரண தேநீர் போன்றவற்றை நுகர்வோருக்கு வழங்க முடியவில்லை என அவர் தெரிவித்தார்.
அத்துடன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் கோப்பையின் விலை 3 ரூபாவிலிருந்து 7 ரூபாயாக அதிகரித்துள்ளது. கொவிட் தொற்றுநோய் காரணமாக, நுகர்வோருக்கு தேநீர் வழங்குவதற்கு பிளாஸ்டிக் கோப்பைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாகவும், பால் தேநீர் வழங்க முடியாதுள்ளதாக தெரிவித்த அவர், எனவே பால் தேநீர் தயாரிப்பதையும், விற்பதையும் தவிர்ப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.