‘உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது’

நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என, விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வருடத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுமென பலரும் அச்சம் கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், சிறுபோகத்தினூடாக 5 இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட விளைச்சல் ஆறு மாத காலத்திற்கு போதுமானது எனவும் பெரும்போகத்திற்காக 7 இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

'உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது'
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version