நடிகை குஷ்பூ உடல் மெலிந்து முன்பு போன்ற இளமையழகை மீட்டு வருகிறார். அந்த வகையில் கலர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொருட்டு அவர் சிவப்பு நிற சேலையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் பலரை இரசிக்க வைத்துள்ளது.
ஹிந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தெலுங்கு சினிமாவிலும் கால்பதித்து தமிழ்சினிமாவிற்கு வந்தவர்தான் நடிகை குஷ்பூ. தமிழில் ரஜனிகாந், கமல், விஜயகாந், சரத்குமார், சத்தியராஜ், பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த இவர் தற்போது சிறப்புத்தோற்றங்களிலும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகின்றார். கணவரான சுந்தர்ஷியின் தயாரிப்பு மற்று இயக்கத்தில் அதிகமாக நடித்துவரும் இவர் தனியாகவும் திரைப்படங்களைத் தயாரித்து வருகின்றார்.
கன்னடா,மலையாள திரையுலகத்திலும் திரைப்படங்களை நடித்துள்ள இவர் சின்னத்திரையிலும் கொடிகட்டிப்பறந்துள்ளார்.
தற்போது அரசியலில் தனது ஆர்வத்தைக் காட்டிவரும் குஷ்பூ தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார்.