இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்ச தான் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட்டுக்கு அறிவித்துள்ளார்.கடிதம் மூலம் தனது இராஜினாமா கடிதத்தை பானுக்க ராஜ்பக்ச அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
தனது குடும்பத்துடன் கலந்தாலோசித்து, தனது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த முடிவினை எடுத்துளளதாக பானுக்க ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
30 வயதான பானுக்க 5 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும், 18, 20-20 போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார். இலங்கை அணிக்கு தொடர்ந்தும் விளையாடும் வாய்ப்புகளுள்ள ஒருவரின் திடீர் ஓய்வு அறிவிப்பு அதிர்ச்சிகரமான அறிவிப்பு என்பதோடு சரியான காரணம் என்னவென்பது தெரியவில்லை.
சிம்பாவே தொடர் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகளும் அவருக்கு காணப்பட்டன. தடை செய்யப்பட்டுள்ள வீரர்கள் தனுஷ்க குணதிலக, குஷல் மென்டிஸ் அணிக்குள் வந்தாலும் பானுக்க ராஜபக்சவிற்கு விளையாடும் வாய்ப்புகள் காணப்பட்டன.