பொரளை – கித்துல்வத்த பிரதேசத்திலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று (21/01) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு கொழும்பு மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள் சம்ப இடத்திற்கு விரைந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இதுவரை தெரியாதமையின் காரணமாக அது தொடர்பிலான முழுமையான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொரளை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.