பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நவலோகோ வைத்தியசலையில் அவருக்கு சிறிய முதுகெலும்பு சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுளளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்த சிகிச்சையிலிருந்து அவர் குணமடைந்து வருவதாகவும், அவரின் உடல் நிலை சிறப்பாக உளளதாகவும் வைத்தியசலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையை சேர்ந்த, இங்கிலாத்தின் முன்னணி எலும்பு சத்திர சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ஹிலாலி நூர்டீன் இந்த சத்திர சிகிச்சையினை மேற்கொண்டுள்ளார். குறித்த வைத்தியரின், தற்போதைய இலங்கை விஜயத்தின் போது பிரதமர் உட்பட இன்னும் பல அரசியல்வாதிகள் அவரிடம் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.