இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் கடனுதவி

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

ஏற்கெனவே கடனாக வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்த 900 மில்லியன் டொலர்களில் 500 மில்லியனை உடனடியாக விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் விரைவில் இந்த கடன் தொகை இலங்கைக்கு கிடைக்கப் பெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்தியாவிலிருந்து நேரடியாக எதிர்காலத்தில் மின்சாரத்தை பெறுவதற்கு இணக்கம் காணப்படுவதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் கடனுதவி

Social Share

Leave a Reply