19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டி இந்தியா 19 வயதிற்குட்பட்ட அணி மற்றும் இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் நேற்று (5/2/2022) மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட அணி 44.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 189 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜேம்ஸ் ரெவ் 95 ஓட்டங்களையும், ஜேம்ஸ் சேல்ஸ் 34 ஓட்டங்களையும், ஜோர்ஜ் தோமஸ் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ராஜ் பவா 5 விக்கெட்களையும், ரவி குமார் 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய 19 வயதிற்குட்பட்ட இந்தியா அணி 47.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் நிஷாந்த் சிந்து ஆட்டமிழ்க்காமல் 50 ஓட்டங்களையும், ஷைக் ரஷீட் 50 ஓட்டங்களையும், ராஜ் பவா 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட அணி சார்பாக ஜேம்ஸ் சேல்ஸ், ஜோஷுவா போய்டன், தோமஸ் அஸ்பின்வோல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்தியா 19 வயதிற்குட்பட்ட அணி ஐந்தாவது தடவையாக உலக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
16 அணிகள் பங்குபற்றிய இந்த தொடரில் இலங்கை அணி ஆறாமிடத்தை பெற்றுக்கொண்டது.