சுதந்திர கட்சியிலிருந்து விலகினார் ஜீவன்

முன்நாள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருத்து விலகுவதாக ஊடகங்கள் மூலமாக அறிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைவரான ஜீவன் குமாரதுங்க, தான் குமார வெல்கமவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய சுதந்திர கட்சியில் இணையவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் காணப்படும் இரட்டை கொள்கை காரணமாக பலர் அதிருப்தியில் இருப்பதாக ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஜீவன் குமாரதுங்க, முன்நாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் கணவர் விஜயகுமாரதுங்கவின் மருமகனாவார்.

சுதந்திர கட்சியிலிருந்து விலகினார் ஜீவன்

Social Share

Leave a Reply