கிழக்கு யுக்ரைன் மீது ரஸ்சியா இராணுவ நடவடிக்கை

கிழக்குக்கு யுக்ரைன் பகுதியினை, ரஸ்சியா சுதந்திர பகுதியா கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று கிழக்கு உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கையினை ஆரம்பித்துளளதாக ரஸ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார்.

யுக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கை தொடர்பில் அறிவித்து சில நிமிடங்களிலேயே உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யுக்ரைன் இராணுவம் ஐந்து ரஸ்சியாவின் விமானங்களையும், ஒரு ஹெலிஹொப்டரையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ள போதும் ரஸ்சியா அதனை மறுத்துள்ளது.

ரஸ்சியாவின் இந்த இராணுவ நடவடிக்கைக்கு எதிராக யாரவது செயற்பட்ட்டால் உடனடி பதில் நடவடிக்கை எடுக்கப்படுமென ரஸ்சியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது உலக நாடுகளுக்கான மறைமுக எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

கனடா ரஸ்சியா மீதான பொருளாதாரா தடையினை ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், யுக்ரைனின் நேச நாடான அமெரிக்கா இன்று முக்கிய அறிவித்தலை வெளியிட இருப்பதாகவும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஸ்சியா இராணுவ நடவடிக்கை தொடர்பில் அறிவித்த பிரதேசங்களை சேந்த மக்கள் அந்த இடங்களை விட்டு வெளியேறுவதாகவும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த பகுதிகளில் உள்ள இராணுவத்தினரை ஆயுதங்களை வைத்துவிட்டு, தங்களது வீடுகளுக்கு திரும்புமாறும் ரஸ்சியா ஜனாதிபதி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

யுக்ரைன் அரசாங்கம் உடனடியாக இந்த நடவடிக்கைளில் ஐக்கிய நாடுகளை தலையிட்டு போரை நிறுத்த வேண்டுமென கோரியுள்ள அதேவேளை, ஐரோப்பாவின் மிகவும் மோசமான போராக இது மாறும் வாய்ப்புகள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் அன்டோனியா கட்டேர்ஸ் உடனடியாக இந்த இராணுவ நடவடிக்கையினை நிறுத்துமாறு ரஸ்சியா ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டால் பல உயிரிழப்புகளும், சேதங்களும் ஏற்படுமென அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துளளார்.

கிழக்கு யுக்ரைன் மீது ரஸ்சியா இராணுவ நடவடிக்கை

Social Share

Leave a Reply