எரிபொருள் தட்டுப்பாடு இனி இல்லை

இலங்கையில் இனி எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாதென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ள எரிபொருளின் விநியோகம் நாடு முழுவதும் நடைபெற்று வருவதாகவும், மேலதிகமாக எரிபொருள் இலங்கைக்கு வருகை தருவதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் W.W.D. சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வழமைக்கு மாறாக பாவனையாளர்கள் அதிகமாக எரிபொருளை நிரப்புவதனாலும், சேமித்து வைப்பதனாலுமே இந்த எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், அரசாங்கம் இலங்கைக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய சகல நடவடிக்கைகைகளை எடுத்துள்ளதாகவும், எரிபொருள் கப்பலிலிருந்து இறக்கப்பட்டு வருவதாகவும் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ள அதேவேளை மக்கள் தேவையின்றி குழப்பமடைய வேண்டாமெனவும், வரிசைகளில் நிற்க வேண்டாமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரண்டு கப்பல்களில் டீசல் இறக்கப்பட்டு வருவதாகவும், திங்கட் கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் மேலும் ஒவ்வொரு கப்பல்களில் டீசல் நாட்டு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு இனி இல்லை

Social Share

Leave a Reply