வலுசக்தி அமைச்சராக பதவியேற்றுள்ள காமினி லொக்குகே பெற்றோல் விலையினை அதிகரிக்கும் திட்டமில்லையென தெரிவித்துள்ளார். உலக சந்தையில் பெற்றோல் மற்றும் ஒயிலின் விலைகள் அதிகரித்துள்ள போதும் விலையேற்றம் செய்யப்படாது என இன்று (09.03) ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
தற்சமயம் இலங்கையில் இறக்கப்பட்டு வரும் ஒயிலின் விலை 32 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. ஆனால் தற்போது 52 மில்லியன் அமெரிக்கா டொலராக விலை உயர்ந்துளளது. அதனடிப்படையில் ஒரு கலனுக்கு 81 ரூபா அதிகரித்துள்ளது.
இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட எரிபொருள் கடனாக 7 அல்லது 8 கப்பல்களிலும், விமானம் மூலமாகவும் எரிபொருட்கள் வரவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், வரும் திங்கள் அல்லது செவ்வாய் கிழமைகளில் மின்சார தடையும், எரிபொருள் தட்டுப்பாடும் சீரான நிலைமைக்கு வருமென தான் நம்புவதாகவும் தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
