நள்ளிரவு முதல் 13 மணித்தியாலங்கள் மின்வெட்டு

நாளையதினம் 13 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல் செய்யப்படவுள்ளதாக பொது சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்களுக்கு கிடைப்பதில் தொடர்ந்தும் தாமதம் நிலவுவதால் இந்த மின் தடை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் 15 மணி நேர மின் தடைக்கான வாயுப்புக்கள் உள்ளதாக கூறியுளளது. மின்சார பொறியிலாளர் சங்கம் இந்த மின்தடை தொடர்பில் ஆரம்பம் முதலே இவ்வாறான எச்சரிக்கைகளை விடுத்த வேளையில் இலங்கை பொது சேவைகள் ஆணைக்குழு அவர்களுக்கு மின்தடை தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்க முடியாதென தெரிவித்திருந்தது.

மறுக்கப்பட்ட விடயங்கள் யாவும் தற்போது இலங்கையில் நடைபெற்று வருகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் வறட்சி ஆகிய காரணங்களினால் 13 மணித்தியால மின்தடைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் மின்தடை ஆரம்பிப்பதனால் மக்கள் தமக்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள் என்ற அறிவிப்பை வி மீடியா உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறது.

மின்வெட்டு நேரங்கள்

பகுதிகள் A, B, C, D, E, F – 3 மணித்தியாலங்கள் 3.00am to 6.00am / 4 மணித்தியாலங்கள் 12.00pm to 4.00pm / 6 மணித்தியாலங்கள் 6.00pm to 12.00am

பகுதிகள் G, H, I, J, K, and L – 3 மணித்தியாலங்கள் 12.00am to 6.00am / 4 மணித்தியாலங்கள் 8.00am to 12.00 pm / 6 மணித்தியாலங்கள் 4.00pm to 10.00pm

பகுதிகள் P, Q, R, and S – 3 மணித்தியாலங்கள் 3.00am to 6.00am / 4 மணித்தியாலங்கள் 12.00pm to 4.00pm / 6 மணித்தியாலங்கள் 6.00pm to 12.00am

பகுதிகள்s T, U, V, and W – 3 மணித்தியாலங்கள் 12.00am to 3.00am /4 மணித்தியாலங்கள் 8.00am to 12.00pm / 6 மணித்தியாலங்கள் 4.00pm to 10.00pm

பகுதிகள் M, N, O, X, Y, and Z (கைத்தொழிற் பேட்டைகள் ) – 3 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் from 5.30am to 9.00am / 2 மணித்தியாலங்கள் 4.00pm to 6.00pm

நள்ளிரவு முதல் 13 மணித்தியாலங்கள் மின்வெட்டு

Social Share

Leave a Reply