அட்லியின் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்புக்கள் புனேயில் நடைபெற்று வருகின்றன.
“லயன்” எனப் பெயரிடப்பட்ட இத்திரைப்படம் நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு மற்று பலர் நடிப்பில் உருவாக்கப்படுவதுடன், இத்திரைப்படத்தின் கதை தற்போது பிரபலமான வெப் சீரிஸான மணிஹெயிஸ்ற் றீமெக்கென படக் குழுவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
லயன் திரைப்படமும் கதாநாயகன் வங்கியொன்றைக் கொள்ளையடிக்கும் கதையாகவுள்ளதுடன், மணிஹெயிஸ்ற் வெப்சீரிஸ் வெளிவந்து சில நாட்களிலேயே அதற்கான ஹிந்தி உரிமத்தை ஷாருக்கான் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.