போராட்டத்தை குழப்ப கொமாண்டோக்களுக்கு போராட்ட பயிற்சி?

இராணுவ கொமாண்டோ படையணியினருக்கு போராட்டங்களில் கோஷங்களை எழுப்பி போராட்ட பயிற்சிகளை கடவத்தை பயிற்சி முகாமில் வழங்கி வருவதாக முன்னிலை சோஷலிச கட்சி வீடியோ ஆதரங்களை ஊடங்களுக்கு வெளியிட்டுள்ளது.

காலிமுகத்திடலில் இடம்பெறும் போராட்டத்திற்குள் கொமாண்டோ படையணியினை அனுப்பி போராட்டத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முனைப்போடு இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக அந்த கட்சியின் அமைப்பு செயலாளர் துமிந்த நாகமுவ இன்று ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

கொமாண்டோ படையணியின் ஒரு குழுவினர் சாதாரண போராட்ட மக்கள் போலவும், இன்னுமொரு குழுவினர் மாறுவேடம் பூண்ட போராட்ட குழுவினர் போன்று பயிற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ள அமைப்பு செயலாளர், வடை விற்பனை செய்து மாட்டிக்கொண்டவர் தொடர்பிலும் ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

போராட்டத்தை குழப்ப கொமாண்டோக்களுக்கு போராட்ட பயிற்சி?

Social Share

Leave a Reply