வத்திக்கானில் ஈஸ்டர் தாக்குதல் விசேட ஆராதனை

வத்திக்கானில் நாளை(25.04) பாப்பரசர் பிரான்ஸ்சிஸ் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக விசேட ஆராதனை வழிபாடுகளை நடாத்தவுள்ளார் என கொழும்பு பேராயர் கார்டினல் மல்கொம் ரஞ்சித் ஆண்டகை வத்திகானிலிருந்து தெரிவித்துள்ளார்.

இது அரசியல் நிகழ்வல்ல என தெரிவித்துள்ள அவர், ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கபப்ட்டவர்களுக்கான பூசை வழிபாடுகளே என தெரிவித்துள்ளார். மல்கொம் ரஞ்சித் ஆண்டகையோடு ஈஸ்டர் குண்டு தாக்குதலில் காயமடைந்த சிலரும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களது உறவினர்கள் இத்தாலி, வத்திகானுக்கு பாப்பரசரரை சந்திப்பதற்காக சென்றுள்ளனர்.

குறித்த வழிபாடுகளை தொடர்ந்து வத்திக்கான சென்றுள்ளவர்கள் பாப்பரசரை சந்திக்கவுள்ளனர். “ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்க, சர்வதேச சமூகத்தை அழுத்தம் கொடுக்கும் முகமாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. அவற்றை வெளிக்கொண்டு வர அழுத்தம் கொடுக்க இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும்” பேராயர் மேலும் தெரிவித்துள்ளார்.

வத்திக்கானில் ஈஸ்டர் தாக்குதல் விசேட ஆராதனை

Social Share

Leave a Reply