400 மீட்டர் தடை தாண்டி ஒட்டப்போட்டிகளில் பல பதக்கங்களை வெற்றி பெற்ற இலங்கை தேசிய வீராங்கனை கெளஸல்யா மதுஷானி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 27 வயதான இவர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பல போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களை வென்றுள்ளார்.
குளியாப்பிட்டியவை வசிப்பிடமாகக் கொண்ட இவர் 2014 ஆம் ஆண்டு தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றவர் இறுதியாக 2019 ஆம் ஆண்டு 13 ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் வெள்ளிப்பதக்கத்தை வெற்றி பெற்றவர்.
இலங்கைக்குள் நடைபெற்ற போட்டிகளில் தங்கப்பதக்கங்களை ஏராளமாக வென்றவரது இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் விளையாட்டு துறை அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ மதுஷானியின் இறப்பு தனக்கு அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளதோடு, அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் அஞ்சலிகளை தெரிவித்துள்ளார்.