நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மேலதிக ஆதரவு

அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மேலதிக ஆதரவு இருப்பதாக ஐக்கிய மக்கள் சகதி தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார். 113 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கையொப்பமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமது கூட்டணி இடைக்கால அரசு அமைக்கும் திட்டத்தில் இருக்கவிலையெனவும் ஆனால் தற்போது அந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியிலிருந்து வெளியேறியுள்ள 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதாயின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக கையொப்பமிடுவதாக தெரிவித்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி தமது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெறும் பட்சத்தில் முதற்கட்டமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியினை இழப்பதோடு அமைச்சரவை கலைக்கப்படும். அதன் பின்னர் 113 என்ற பெரும்பானமையினை நிரூபிக்கும் கட்சி அரசாங்கத்தை அமைக்க முடியும்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மேலதிக ஆதரவு

Social Share

Leave a Reply